நான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை: விஷால்

ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (15:03 IST)
பிரபல நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாக சற்று முன் வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் இந்த செய்தியை மறுத்துள்ளார் 
 
கடந்த சில மாதங்களாக பல திரையுலக பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் கடந்த சில மணி நேரங்களாக விஷால் பாஜகவில் இணைய இருப்பதாகவும் விரைவில் அவர் பாஜக தலைவர் எல் முருகன் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் இணைய தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரது ரசிகர்கள் உள்பட பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நான் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்று நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து அவர் பாஜகவில் இணையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்