அருள்நிதியின் படத்திற்கு ’தேஜாவு’ என்ற பெயர் ஏன்? இயக்குநர் விளக்கம்

திங்கள், 26 ஜூலை 2021 (22:10 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அருள்நிதி. இவர் நடிப்பில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ள டேஜாவு படத்தின் 2 வது லுக் போஸ்டர் கடந்த 22 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் தேஜாவு என்று ஏன் இப்படத்திற்குப் பெயர் வைக்கப்பட்டது என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாது சினம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி பாணியை கொண்டவர் நடிகர் அருள்நிதி.

சமீபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி தற்போது அவர் நடித்து வரும் “டி ப்ளாக்” படத்தின் போஸ்டர் வெளியானது.

தேஜாவு படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கிவருகிறார். இப்படத்தை விஜய் பாண்டி என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு ஏன் தேஜாவு எனப் பெயர் வைத்திருக்கிறோம் என இப்படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதில், இது ஒரு திரில்லர் படம். இப்படத்தில் அருள்நிதி போலீஸாக  நடித்திருக்கிரார். ஆனால், இதில் சீருடை அணிந்து படம் முழுக்க வரமாட்டார். ஒரு புதிய இடத்திற்குச் சென்றாலோ, புதிய நபர்களுடன் பேசினாலோ, பார்த்தாலோ, நாம் ஏற்கனவே பார்த்தது போலவோ ,பேசியது போலவோ

இருக்கும் இதைத்தான் தேஜாவு என்று உலகில் அழைக்கபடுகிறது. இதேயே நாங்கள் படத்தலைப்பாக வைத்திருக்கிறோம் எனவும், இபடத்தின் காட்சிகள் யூகிக்க முடியாத அளவு இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்