தமிழ் சினிமாக்காரர்கள் காஷ்மீர் படையெடுப்பது ஏன்?.. ஓ இதுதான் காரணமா?

செவ்வாய், 24 அக்டோபர் 2023 (11:44 IST)
கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள விஜய்யின் லியோ திரைப்படம் பெரும்பகுதி காஷ்மீரில் படமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடத்தினர். இதனால் படத்தின் பட்ஜெட் அதிகமாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.

அதே போல இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படமும் கிட்டத்தட்ட 90 நாட்கள் காஷ்மீரில் படமாக்கியுள்ளனர். செலவு அதிகமானாலும் இப்படி தமிழ் சினிமாக்காரர்கள் காஷ்மீர் சென்று படப்பிடிப்பை நடத்த ஒரு முக்கியக் காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

காஷ்மீரில் ஷூட்டிங் நடத்தினால் அங்கு செலவிடப்படும் தொகையில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை மானியமாக அம்மாநில சுற்றுலாத்துறை அளிப்பதால்தான் படக்குழுவினர் அங்கு சென்று ஷூட்டிங் நடத்துவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்