இந்நிலையில் ரஜினி நடிக்க மறுத்த காரணம் இப்போது வெளியாகியுள்ளது. கதைப் பிடித்து போன ரஜினி போலிஸ் ஸ்டேஷனில் அடிவாங்குவது போல இருக்கும் காட்சிகள் வேண்டாம் என்றும் அதில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். பின்னர் கமர்ஷியலாக சீன்களை மாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அப்படி செய்தால் கதை நீர்த்துப் போய்விடும் என்பதால் ஜீத்து ஜோசப் கமலிடம் சென்றுள்ளார்.