ஓவியாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் என இரண்டு விதமாகத்தான் இனி அனைவரும் பார்ப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்க்கு முன் சாதாரண நடிகையாக இருந்த ஓவியா, தற்போது கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். ஒருவர் உண்மையாக, அவராகவே இருந்தால் மரியாதையும் புகழும் தானாகவே கிடைக்கும் என்பதை ஓவியா நிரூபித்துவிட்டார்.
ஓவியாவுக்கு கிடைக்கும் கைதட்டலில் ஒரு சதவீதம் கூட மற்ற பங்கேற்பாளர்களுக்கு ஆடியன்ஸ்களிடம் கிடைக்காததே மற்ற பங்கேற்பாளர்களுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே ஓவியா அவர்களால் வெறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நாமும் உண்மையாக இருந்தால் கைதட்டல் கிடைக்கும் என்ற எண்ணம் இன்னும் ஒருவருக்கு கூட வரவில்லை என்பதுதான் பெரிய சோகம்