ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை?நடிகை மும்தாஜ் விளக்கம்

sinoj

சனி, 6 ஏப்ரல் 2024 (20:10 IST)
பிரபல நடிகை மும்தாஜ் தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனலிசா என்ற படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மும்தாஜ்.
 
இப்படத்தை அடுத்து,  மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்ம நாபன், லூட்டி, ஸ்டார், வேதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
 
திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்ததுடன் பல படங்களில் நடனம் ஆடியுள்ளார். தற்போது சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் ஆன்மிகத்தில் ஈடுபாட்டு காட்டி வருகிறார்.
 
இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில், இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
 என் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். அதனால் ஒருகட்டத்தில் இறைவனை மட்டுமே நம்பத் தொடங்கினேன். நான் திருமனம் செய்து கொள்ளாதது பற்றி பலரும் பலவிதமாக பேசுகின்றனர். ஆனால், எனக்கு 25 வயது இருக்கும்போது ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர் நோய் இருப்பது தெரியவந்தது. இதனால் திருமண வாழ்க்கை எனக்கு நியாயமாக இருக்காது என்பதை உணர்ந்தேன். அதனால்தான்  நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. மற்றவர்களை பார்க்கும்போது எனக்கும் அப்படி இருக்கத் தோன்றும் ஆனால் மனரீதியாக அதற்கு நான் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்