விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனை, லோகேஷ் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் வெற்றிக்காக இந்த உதவியைக் கமல்ஹாசன் செய்ய ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கமல் விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அதனால் விஜய்க்காக இந்த கேமியோ வேடத்தை செய்தால், விஜய்யின் கால்ஷூட்டை வாங்குவது எளிதாக இருக்கும் என்பதால் தளபதி 67 ல் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது.