நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் நேற்று ரிலீஸானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறிவருகின்றனர். அதேபோல் பிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக சினேகா நடித்துள்ளார்.
நேற்று வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் சென்னையில் ரூ. 89 லட்சம் வசூலித்துள்ளது. அதோடு சென்னையில் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்களின் வரிசையில், வேலைக்காரன் 7-வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.