ரஜினியால் மாபெரும் வெற்றி கண்ட பாடலாசிரியர்! ட்விட்டரில் பெருமிதம்!

வியாழன், 31 ஜனவரி 2019 (16:37 IST)
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 


 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார் . விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற மிகப்பெரும் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்திருந்தனர்.
 
பேட்ட படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து அபார சாதனை படைத்துள்ளதாக  திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடல் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.  இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் ட்விட்டரில் தெரிவித்து இதனை உறுதி செய்துள்ளார் மேலும் தளபதி 63 படத்திற்கும் இவர் தான் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்