இந்த நாவலை ஆதிகாலம் தொட்டு எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோர் எடுக்க முயன்று தோல்வியடைந்தனர். அதை அடுத்து இயக்குனர் மணிரத்னம் சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னியின் செல்வனை கையில் எடுத்து பின்புக் கிடப்பில் போட்டார். இப்போது மீண்டும் அதை தூசு தட்டி மீண்டும் பொன்னியின் செல்வன் முன் தயாரிப்பு வேலைகளை செய்துவருகிறார்.
ஆனால் ஒரேக் கதையை எப்படி இருவர் உரிமைப் பெற்று படமாக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?. பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய கல்கி இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால் அந்நாவல் நாட்டுடமையாக்கப்பட்டு விட்டது. அதனால் நாவலை யார் வேண்டுமானாலும் அதை உபயோகித்துக் கொள்ளலாம். எனவே ஒரே நேரத்தில் இருவரும் படமாக்குவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.