இந்நிலையில் கடந்த மே 1-ந் தேதி நடிகர் அஜித் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடினார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பொதுவாக எப்பொழுதும் அஜித் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி சண்டையிடுவதைப் பற்றி தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அஜித் பிறந்தநாளன்று விஜய் ரசிகர்கள் அஜித்திற்கு பேனர் வைத்து தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். மேலும் முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.
அஜித் தான் பெரியவர், விஜய் தான் பெரியவர் என பலர் வெட்டி சண்டையில் ஈடுபட்டிருக்கும் வேளையில், விஜய் ரசிகர்கள் இப்படி செய்திருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.