#WeLoveYouTHALA ...அஜித் அறிக்கை ... ஹேஸ்டேக் டிரெண்டிங்

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (23:59 IST)
நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து அவரது ரசிகரகள் இதை சமூக வலைதளத்தில் டிரெண்டிங் செய்து வரிகின்றனர்.

அஜித் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 
ரசிகர்கள், வெறுப்பவர்கள் & நடுநிலைகள் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள்.

ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்.

வாழ & வாழ விடு!

நிபந்தனையற்ற அன்பு எப்போதும் !!

இந்த செய்தியை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி வெறுப்பாளர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்திடம் இருந்து திடீரென வெளியானது ரசிகர்க்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நீண்ட நாள் கழித்து ஓபனாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதற்கு ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் #WeLoveYouTHALA என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்