நல்லா கிளப்புறாங்கய்யா வதந்தியை...

செவ்வாய், 17 மே 2016 (12:47 IST)
அஜித்தின் புதிய படம் குறித்து பல வதந்திகள். முக்கியமாக, அஜித்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இது எவ்வளவு தூரம் உண்மை?


 
 
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்த புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தில் இரு நாயகிகள். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது முழுக்க அடிப்படையற்ற வதந்தியே தவிர உண்மையில்லை என படக்குழு அடித்துச் சொல்கிறது. 
 
அதேபோல் ரித்திகா சிங் படத்தில் நடிக்க உள்ளார் என்பதையும் படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவருடன் பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்கிறார்கள். 
 
எனில் எப்படி இந்த வதந்திகள் வருகின்றன?
 
எல்லாம் கிசுகிசு எழுத்தாளர்களின் கைங்கர்யம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்