’’சூர்யாவின் படத்தை திரையிட மாட்டோம்’’ - தியேட்டர் அதிபர் மறைமுக தாக்கு!!

செவ்வாய், 29 டிசம்பர் 2020 (17:17 IST)
சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்திருந்த படம் சூரரைப் போற்று. இப்படத்தைக் கொரொனா கால ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைம் வீடியோ என்ற ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்தார். இதற்குத் தியேட்டர் அதிபர்கள், மற்றும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் திரையரங்க உரிமையாளர் ரோகிணி பன்னீர்செல்வம் சூர்யாவை விமர்சித்துள்ளதுடன் அவரது படங்களை திரையிடப் போவதில்லையெனக் கூறியுள்ளார்.

மேலும் வரும் பொங்கலுக்குத் தமிழகம் முழுவதும் சுமார் 800 தியேட்டர்களில் வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தை திரையங்கில் வெளியிடவுள்ள விஜய் மற்றும் சிம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்