எல்லாவற்றுக்கும் காரணம் அவர் தான்: போட்டோஷூட் குறித்து விவேக்!

புதன், 28 அக்டோபர் 2020 (16:33 IST)
எல்லாவற்றுக்கும் காரணம் அவர் தான்
நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் இன்று காலை வெளியிட்ட போட்டோஷூட் போட்டோக்கள் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. முழுக்க முழுக்க வெள்ளை உடையில் வெள்ளை நிறத்தின் பின்னணியில் இருந்த இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர் 
 
மங்காத்தா அஜித் போல் இருப்பதாகவும் கமல் ரஜினி போல் இருப்பதாகவும் விவேக்கை அவர் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இந்த பாராட்டு மழையில் நனைந்த நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் 
 
என் சமீபத்திய போட்டோஷூட் திரை உலக அளவில் பலராலும் பாராட்டப்படுகிறது. அதற்கு முழு காரணம் காஸ்ட்யூம் ஸ்டைலிஷ்ட் சத்யா மற்றும் அவரது குழுவினர் தான். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் விவேக்கின் போட்டோஷூட் குறித்து கருத்து தெரிவித்த நடிகரும் இயக்குனருமான மனோபாலா ’சூப்பர் விவேக், ஸ்டார் மியூசிக்’ என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 
 
மேலும் பல திரையுலக பிரபலங்கள்  விவேக்கின் ஃபோட்டோஷூட்டை பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.விரைவில் விவேக் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்