விவேக் படத்தில் பாடல் எழுதிய தனுஷ் – டிவிட்டரில் நெகிழ்ச்சி!

வியாழன், 8 அக்டோபர் 2020 (12:31 IST)
நடிகர் விவேக் நடித்து வரும் எழுமின் படத்தில் தனுஷ் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

நடிகர் விவேக் கணேஷ் சந்திரசேகர் இயக்கும் எழுமின் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் எழுடா எழுடா என்ற பாடலை நடிகர் தனுஷ் எழுதி கொடுத்துள்ளார். இத்ற்காக விவேக் டிவிட்டரில்  ‘உணர்ச்சிகரமான பாடலை எழுதிக்கொடுத்த தனுஷுக்கு என் நன்றி என்றென்ன்றும் உண்டு’ எனக் கூறியுள்ளார்.

இருவரும் இணைந்து படிக்காதவன், மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நட்பின் அடையாளமாக இந்த பாடலை தனுஷ் எழுதிக் கொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்