கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி, சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்நிலையில், மற்றொரு பாலிவுட் நடிகரான விவேக் ஓபராயும், வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்துள்ளார். ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி, சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சில வீரர்கள் மரணமடைந்தனர். எனவே, அவர்களையும் சேர்த்து மொத்தம் 25 வீரர்களின் குடும்பத்தினருக்கு பிளாட் (வீடு) வழங்க ஓபராய் முன் வந்துள்ளார்.