ஒரு வழியாக தொடங்கிய விஷ்ணு விஷால் ராம்குமார் படத்தின் ஷூட்டிங்!

vinoth

வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (08:02 IST)
விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் ஷூட்டிங் 20 நாட்கள் கொடைக்கானலில் தொடங்கி நடத்தப்பட்டது. அதன் பிறகு விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் பிஸியானதால் இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இந்த படத்தின் மொத்தக் கதைக்களனும் கொடைக்கானலில் நடக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இரண்டாவது கட்ட ஷூட்டிங் மீண்டும் கொடைக்கானலில் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்