ஒரு மாம்பழ சீசனிலே… பேச்சிலர் பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால்!

vinoth

புதன், 17 ஜூலை 2024 (08:09 IST)
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கும் விஷ்ணு விஷால் சமீபத்தில் ரஜினியோடு லால் சலாம் படத்தில் நடித்தார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. அதற்கு முன்னர் விஷ்ணு விஷால் நடித்த  ‘கட்டா குஸ்தி’  திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதையடுத்து சில படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் பேச்சிலர் திரைப்படத்தை இயக்கிய சதீஷ்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வெளியாகியுள்ள போஸ்டரில் ‘ஒரு மாம்பழ சீசனிலே’ எனத் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்