இப்படம் டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் வெளியாகும் அதே நாளில், சீதக்காதி, மாரி2, கனா, அடங்க மறு உள்ளிட்ட படங்கள் வெளியாகிறது. இதனால் விஷ்ணு விஷால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் கூறுகையில்,
‘‘எனது சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை ஏற்கனவே திரைக்கு கொண்டு வர முயற்சித்து வேறு படங்கள் வெளியானதால் தள்ளிவைக்கும் நிலைமை ஏற்பட்டது. இறுதியாக வருகிற 21–ந்தேதி வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்தது. அப்போது வேறு புதிய படங்கள் வராது என்றும் உறுதி அளித்தார்கள். ஆனால் இப்போது நிறைய பெரிய பட்ஜெட் படங்களை வெளியிட அனுமதி கொடுத்து விட்டனர். தயாரிப்பாளர் சங்கம் படங்கள் வெளியீட்டுக்கு தேதிகள் ஒதுக்குவதில் உறுதியாக இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது.