வில்லேஜ் கதையில் ஹாட்ரிக் அடிக்கப் போகும் சூர்யா! அடுத்தடுத்து வரிசைக் கட்டும் படங்கள்!

சனி, 23 ஜனவரி 2021 (16:46 IST)
சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள மூன்று திரைப்படங்களும் கிராமத்து கதைக்களத்தைக் கொண்டவையாக அமையவுள்ளன.

சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கான பின் தயாரிப்பு வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஆனால் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. இந்த படம் பாண்டிராஜ் ஸ்டைலில் அக்மார்க் கிராமத்துக் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

அதையடுத்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் ஆகிய இரு படங்களும் கிராமத்துக் கதையை மையமாகக் கொண்டவைதானாம். இதன் மூலம் வரிசையாக மூன்று கிராமிய கதைகளில் நடிக்க உள்ளார் சூர்யா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்