விஷ்ணு விஷால் -ரவிதேஜா படத்தின் டைட்டில் அறிவிப்பு!

செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (19:07 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு பிரபல நடிகர் ரவி தேஜா ஆகிய இருவரும் இணைந்து தமிழ் தெலுங்கில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது
 
விஷ்ணு விஷால் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘கட்டா குஸ்தி’ என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்க உள்ளார் என்பதும் ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்