பூஜையுடன் தொடங்கிய விஷால், தமன்னாவின் கத்திச்சண்டை

திங்கள், 2 மே 2016 (17:34 IST)
மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், சகலகலாவல்லவன் என தொடர்ச்சியாக மூன்று ப்ளாப்களை தந்த சுராஜ் அடுத்து விஷால், தமன்னா நடிக்கும் கத்திச்சண்டை படத்தை இயக்குகிறார். 


 


இதன் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்தது.
 
நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று முடிவெடுத்திருக்கும் வடிவேலு விஷாலுக்காக கத்திச்சண்டையில் காமெடியனாக மீண்டும் நடிக்க உள்ளார். வடிவேலு நடிக்கும் படங்களில் உதிரி காமெடி நடிகர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். மாறாக கத்திச்சண்டையில் வடிவேலுடன் சூரியும் நடிக்கிறார். சுராஜின் மருதமலை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக வடிவேலின் காமெடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இன்று காலை நடந்த கத்திச்சண்டை படத்தின் பூஜையில் விஷால், வடிவேலு, பாண்டிராஜ், சுராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மெட்ராஸ் என்டர்பிரைசஸ் படத்தை தயாரிக்கிறது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்