பூஜையுடன் தொடங்கிய விஷால்- எஸ் ஜே சூர்யா இணையும் மார்க் ஆண்டனி… ஹீரோயின் இவர்தானா?

வியாழன், 5 மே 2022 (16:02 IST)
விஷால் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாக உள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி  படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஷால். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என சமீபகாலமாக அப்டேட்கள் வந்து கொண்டிருந்தன. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்காக அமைக்கப்படும் செட்டில் இருந்து புகைப்படம் எடுத்து அதைப் பகிர்ந்திருந்தார்.

ஆனால் அந்த படம் படப்பிடிப்பு முடியும் முன்னரே கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக இன்று அந்த படத்தின் பூஜை நடந்துள்ளது. இதில் படத்தின் நாயகன் விஷால், மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்