தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கையை விமர்சித்து விஷால் வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சங்க ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் குலைக்க முயன்றதாக விஷால் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.