இந்நிலையில், 3 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் இருவரும் இணைந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும், அதனை தொடர்ந்து இன்னொரு படத்தில் அவருக்கு வில்லியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விஷால் நடிப்பில் தற்போது ரிலீஸுக்கு தயாராகிவரும் படம் ‘அயோக்யா’. இந்த படம் மே மாதம் ரிலீஸாக இருக்கிறது. இதனை தொடர்ந்த அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்குவார் விஷால். சமீபத்தில் அவருக்கு திருமணம் நிச்சயம்மான நிலையில், அடுத்து அவரது திருமண செய்திக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறனர்.