பாலிவுட் இயக்குனரான இவர் பிரபல பெண் இயக்குனர் ஃபரா கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி நடிகை ராசீன், உதவி இயக்குனர் சலோனி சோப்ரா மற்றும் ஒரு பிரபல பத்திரிகையாளர் என அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டை இவர் மீது வைத்தனர். இதனால் நெட்டிசன்கள் மத்தியில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டார் சஜித்.
இதை பற்றி தமன்னா கூறியதாவது, சஜித் கான் இயக்கத்தில் நான் நடித்த ‘ஹிம்மத்வாலா’ , ‘ஹம்சகல்ஸ்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பின் போது அவர் எனக்கு எந்தவித தொந்தரவையும் தந்ததும் இல்லை. அதே போல என்னிடம் தவறாக நடந்து கொண்டதும் இல்லை. அவருடன் பணியாற்றும் போது நான் மிகவும் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் தான் உணர்ந்தேன். மற்றவர்கள் கூறும் புகார் பற்றி எனக்கு தெரியாது, அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம். என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.