தமன்னாவும் சுருதிஹாசனும் நெருங்கிய தோழிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும் புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகமாக வந்திருக்கும். தனது தோழி தமன்னா பற்றி பேட்டி ஒன்றில் சுருதிஹாசன் குறிப்பிடுகையில், தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள் என்றும், அவர் ஒரு நல்ல பெண் என்றும், அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்றிருப்பேன், ஏன் அவரை திருமணம் கூட செய்திருப்பேன்' என்றும் கூறினார்.