வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் இடை நீக்கம்!

திங்கள், 25 ஏப்ரல் 2022 (23:14 IST)
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 800 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று அந்த பள்ளியில் +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.
 

இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து கிளம்ப உள்ளதால் நிறைவு மற்றும் வழியனுப்பு விழா நடத்த மாணவர்கள் அனுமதி கேட்ட நிலையில் பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் சிலர் நேற்று ஆத்திரத்தில் வகுப்பறையில் இருந்த மேசை, நாற்காலிகளை அடித்து உடைத்து கலவரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் அளித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் இன்று பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இ ந் நிலையில் 10 மாணவர்களை மே 4 ஆம் தேதி  வரை இடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர்  நடவடிக்கை எடுத்துள்ளார்.  மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். மாணவர்கள் வன்முறை செயலில் ஈடுபடும் இந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்