கணவன் - மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, மாதவன், கதிர், 'வரலட்சுமி சரத்குமார், ஷராதா ஸ்ரீநாத், ஜான் விஜய், பிரேம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். வினோத் ஒளிப்பதிவில் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டிரெடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.