தள்ளிப் போகிறதா புஷ்பா 2 ரிலீஸ்… அந்த தேதியில் களமிறங்க தங்கலான் திட்டம்?

vinoth

வியாழன், 13 ஜூன் 2024 (07:04 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாவதில் இருந்து தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி ஒரு வேளை தள்ளிப் போனால் அந்த தேதியில் விக்ரம்மின் தங்கலான் படத்தை ரிலீஸ் செய்ய அந்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்