புதிய படம்... ஜிம்மில் பழியாய் கிடக்கும் விக்ரம்

வெள்ளி, 11 நவம்பர் 2016 (15:37 IST)
ஐ படத்திற்கு முன்பும் தோல்விதான், பின்பும் தோல்விதான் என்றிருந்த விக்ரமுக்கு அதிரடி ஹிட்டாக அமைந்தது, இருமுகன். அந்த உற்சாகத்தில் அடுத்தப் படத்தையும் இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கருக்கே என்று முடிவு செய்துள்ளார்.


 

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்காக ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருகிறாராம் விக்ரம். படத்தின் கதாபாத்திரத்துக்காகத்தான் இந்த மெனக்கெடல். அதன் காரணமாகவே அவர் இப்போதெல்லாம் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்