விக்ரம், நயன்தாரா படத்தில் அறிமுகமாகும் ப்ரியதர்ஷன், லிசி மகள்

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (15:23 IST)
ப்ரியதர்ஷன் - லிசி தம்பதிகளின் மகள் கல்யாணி விக்ரம், நயன்தாரா நடித்துள்ள இருமுகன் படத்தில் அறிமுகமாகிறார். நடிகையாக அல்ல, உதவி கலை இயக்குனராக.


 
 
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், காஸ்ட்யூம் டிசைனர் என யாருடைய மகன், மகள்களாக இருந்தாலும் நடிகன், நடிகையாகவே ஆர்வம் காட்டுவார்கள். ப்ரியதர்ஷன் - லிசி தம்பதியின் மகள் கல்யாணிக்கு கலை இயக்கத்தில் ஆர்வம். 
 
யுஎஸ்ஸில் படிப்பை முடித்தவர் ஆனந்த் ஷங்கரின் இருமுகன் படத்தில் கலை இயக்குனர் சுரேஷின் அசிஸ்டெண்டாக பணிபுரிந்துள்ளார். இது அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்