இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”பெரும்பணக்காரர்களும், ஜமீந்தார்களும் பிரிட்டிஷாருக்கு ஆலோசனை சொல்ல உருவாக்கப்பட்டதே சட்டமேலவை. பின்னாட்களில் பல மாநிலங்களில் சட்ட மேலவை கலைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சட்டமேலவை கலைக்கப்பட்டது”
“திமுக ஆட்சிக்கு வரும் சமயங்களில் எல்லாம் சட்டமேலவை ஏற்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றுவதும், அதிமுக அந்த முயற்சியை முறியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் இருக்க, சட்டமேலவை அவசியமற்றது. சட்டமேலவை கொண்டு வரும் திட்டம் தமிழக அரசுக்கு இருக்குமானால் இன்றைய அரசியல். பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு அந்த திட்டத்தை கைவிடும்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.