விக்ரம் BGM ரெடியா இருக்கு.. அனிருத் அசத்தல் அப்டேட்!

சனி, 2 ஜூலை 2022 (15:46 IST)
விக்ரம் படத்தில் வீடியோ பாடல் நேற்று வெளியான நிலையில் பின்னணி இசை தயாராக இருப்பதாக அனிருத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபது மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடித்த படம் விக்ரம்.

பேன் இந்தியா படமாக கடந்த மாதம் 3ம் தேதி வெளியான இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக நல்ல வரவேற்புடன் வசூலை குவித்துள்ளது. இதுவரை இந்த படம் ரூ.500 கோடியை வசூலித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் வெகுவாக பலரால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் “பத்தல.. பத்தல..” பாடம் நேற்று வெளியாகி ட்ரெண்டானது. தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அனிருத் “விக்ரம் பிஜிஎம் மற்றும் ஓஎஸ்டி தயாராக உள்ளது. ஜூக்பாக்ஸ் சில நாட்களில் வெளியாகும்” என அறிவித்துள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்