அட்லீயின் அடுத்த படம்: கசிந்தது தகவல்...

செவ்வாய், 31 அக்டோபர் 2017 (17:36 IST)
விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கிய அட்லீ முன்னணி இயக்குனர்களுள் ஒருவராகிவிட்டார். தற்போது அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


 
 
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ள அட்லீ சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். அவரின் கால்ஷிட்டை வாங்க பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றது.
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ பின்வருமாறு கூறியுள்ளார், கண்டிப்பாக மெர்சல் வெற்றிக்கு முதலில் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், இவை அனைத்தும் அவர்கள் கொடுத்த ஆதரவு தான்.
 
தெறியை விட மெர்சல் பெரிய வெற்றி அடைந்துள்ளது. என் அடுத்தப்படம் இதோடு பெரிதாக இருக்கும், அதில் விஜய் அண்ணனும் கண்டிப்பக இருப்பார் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்