விஜய்யின் கோட் படத்தின் ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம்… பின்னணி என்ன?

vinoth

திங்கள், 8 ஏப்ரல் 2024 (08:08 IST)
விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக கேரளா மற்றும் ரஷ்யாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. தற்போது படக்குழு ஷூட்டுக்காக துபாய் சென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது கோட் படத்தில் அதிரடியாக ஒரு மாற்றம் நடந்துள்ளது. படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த சித்தார்த்தா நுனி மாற்றப்பட்டு அவருக்குப் பதில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான சக்தி சரவணன் இப்போது பணியாற்றி வருகிறாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்