தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி தற்போது மலையாளப் படம் ஒன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு நித்யா மேனன் நடிக்க, அறிமுக பெண் இயக்குனர் இந்து இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பாக 19 1 a என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை இணையத்தில் விஜய் சேதுபதி பகிர்ந்தார். வித்தியாசமான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.