விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடும் குறும்படம்… வெளியான தகவல்!

புதன், 22 ஜூன் 2022 (16:09 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது மட்டுமில்லாமல் படங்களைத் தயாரிப்பது, கதை வசனம் எழுதுவது என பலதரப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடைசி விவசாயி போன்ற படங்களை வழங்கினார்.

இந்நிலையில் இப்போது அந்த நிறுவனம் சார்பாக அவர் வர்ணம் என்ற குறும்படத்தை தங்கள் நிறுவனத்தின் யுடியூப் பக்கத்தில் வெளியிடுகிறது. இந்த குறும்படம் ஜூன் 24 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்