இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் கிழக்குச் சீமையிலே படத்தின் ராதிகா மற்றும் விஜயகுமார் ஆகியவர்களை நினைவுப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் மினிமம் கியாரண்டி படங்கள். பாசமலர், கிழக்குச்சீமையிலேயே தொடங்கி சமீபத்தில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை வரை எல்லா படங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.