இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகியிருக்க வேண்டியது என்றாலும் கொரோனா தொற்று எனப்படுவதாலும், இன்னும் இதன் தீவிரத்தன்மை குறையவில்லை என்பதாலும் அரசு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அப்போது அனுமதி அளித்தது. ஆனாலும் படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது. உலகளவில் ரூ.200 கோடி வசூல் வாரிக்குவித்துள்ளது.
மாஸ் படங்களின் ஃபார்முலாவை மாற்றியுள்ளது நடிகர் விஜய்யின் மாஸ்டர் எனப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் ரஹானே, அஸ்வின் உள்ளிட்ட பலரும் மாஸ்டர் படத்தைப் பார்த்துள்ளன்ர். விரையில் சூர்யாவின் சூரரைப் போற்றுப் படத்தின் ரிக்கார்டைஅமெசான் பிரைம் வீடியோவில் முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த விஜய் ரசிகை ஆஷ்லினா என்பவர் , மாஸ்டர் படம் பார்ப்பதற்கே சென்னை வந்து அண்ணா சாலையிலுள்ள்ள உள்ள தியேட்டரில் உள்ள மொத்த இருக்கைகளையும் புக் செய்து,தனது குடும்பத்தினருடன் அமர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.