பிரபுதேவா ரஹ்மான் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்…!

vinoth

வியாழன், 20 ஜூன் 2024 (07:40 IST)
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. இவர்கள் கூட்டணியில் உருவான காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மிகப்பெரிய கல்ட் கிளாசிக் பாடல்களாக இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. ஜெண்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடியிருந்தார்.

இருவரும் கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான மின்சாரக் கனவு படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இப்போது ஆறாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மனோஜ் என் எஸ் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மே 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ‘மூன்வாக்-moonwalk’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மூன்வாக் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக படம் நடனம் சம்மந்தப் பட்டத்தாகதான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AR Rahman: Official Updates (@arrofficialupdates)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்