விஜய் சேதுபதியின் படத்தில் இணைந்த வரலட்சுமி சரத்குமார்!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:28 IST)
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் மைக்கேல் படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புரியாத புதிர் மற்றும் இதய ராணியும் இஸ்பேட் ராஜாவும் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படம் மைக்கேல். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்