பேனர் கட்டினா மட்டும் கூட்டம் வரவா போகிறது என்றார்கள்… மகாராஜா நன்றி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எமோஷன்!

vinoth

வியாழன், 20 ஜூன் 2024 (07:47 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த வாரம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் அந்த கிளைமேக்ஸ் காட்சிக்காக அதீத டிராமவை கொண்டு செயற்கை தன்மை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெற்றிகரமாக ஓடிவரும் இந்த படம் விரைவில் 50 கோடி ரூபாய் வசூலை எட்டும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படக்குழுவினர் நடத்திய நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, “இந்த படத்துக்கு பேனர் கட்டும் போது ’விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அதற்காக நான் மகாராஜா படம் பண்ணவில்லை. அப்படி பண்ணினால் அந்த படம் உருப்படாது. என்னை சுற்றியுள்ளவர்கள்தான் அந்த கேள்வியை எழுப்பினார்கள். இப்போது அவர்களுக்கான பதிலாக மகாராஜா அமைந்துள்ளதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்