வில்லனா நடிச்சதனால ஹீரோங்கறதயே மறந்துட்டாங்க போல… ஓப்பனிங்-ஏ விஜய் சேதுபதியின் DSP

சனி, 3 டிசம்பர் 2022 (09:06 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள DSP என்ற படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சேதுபதி மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

தொடர்ந்து விஜய் சேதுபதி தோல்விப் படங்களாக நடித்ததால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை. படம் பார்த்த ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வெளியான முதல்நாளில் இந்த படம் படுமோசமான ஓப்பனிங்கை பெற்றுள்ளதாம். தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்ததால் தான் விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதி நடித்த மாமன்னன் திரைப்படமும் திரையரங்கில் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்