பாங்காக்கில் விஜய் சேதுபதியுடன் டூயட் பாடும் லட்சுமி மேனன்
புதன், 10 ஆகஸ்ட் 2016 (16:03 IST)
விஜய் சேதுபதி நடித்து வரும் றெக்க படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடத்தப்பட்டது. அதில் விஜய் சேதுபதியுடன் லட்சுமி மேனனும் கலந்து கொண்டார்.
ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்த ரமேஷ் றெக்க படத்தை தயாரிக்கிறார். வா டீல் படத்தை இயக்கிய சிவ ஞானம் இயக்கம். ஆக்ஷன் படமாக தயாராகிவரும் இந்தப் படத்தின் பாடல் காட்சியை பாங்காக்கில் படமாக்கினர்.
இந்த டூயட் பாடலில் விஜய் சேதுபதியுடன் லட்சுமி மேனனும் நடித்தார். இந்த வருட இறுதியில் றெக்க திரைக்கு வருகிறது.