காமெடி நடிகருக்கு வில்லன் வேடமா? விஜய் சேதுபதியின் அதிர்ச்சி முடிவு!

புதன், 6 ஜனவரி 2021 (17:08 IST)
வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூரி நடிக்க உள்ள நிலையில் அதில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாரதிராஜா முன்பு ஒப்பந்தம் ஆனார். ஆனால் படப்பிடிப்பு நடக்க உள்ள டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சமவெளிப்பகுதியிலேயே குளிர் அதிகமாக இருக்கும். இந்நிலையில் காடுகளில் முழுப் படப்பிடிப்பும் நடக்க உள்ளதால் பாரதிராஜாவால் வயோதிகத்தின் காரணமாக குளிரை தாங்க முடியாத சூழல் உருவாகவே அப்படத்தில் அவர் விலகினாராம்.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கதாநாயகனாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தன் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் சூரிக்கு வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளாரே என்று கோலிவுட் வட்டாரமே ஷாக்கில் உள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்