மகனை இந்தியா வரவேண்டாம் என சொன்ன விஜய் - காரணம் சங்கீதாவா?

சனி, 18 ஜூலை 2020 (16:47 IST)
நடிகர் விஜய்யின் மகன் கனடாவில் சிக்கியுள்ள நிலையில் அவர் இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்து வேண்டாம் என மறுத்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான நிலையங்களை அனைவரும் மூடியுள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் வேலை நிமித்தமாக சென்றவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் மகனன ஜேசன் சஞ்சய் கனடாவில் மாட்டிக்கொண்டார்.

இதனால் நாடு திரும்ப முடியாமல் மூன்று மாதங்களுக்கு மேலாக கனடாவிலேயெ உள்ளார். இப்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம், கனடாவில் இருக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தானும் விமான டிக்கெட் புக் செய்து இந்தியா வந்துவிடவா என சஞ்சய் கேட்டுள்ளார்.

அதற்கு விஜய் சம்மதித்தாலும் அவரது மனைவியான சங்கீதா, அதில் இருக்கும் பாதக அம்சங்களை பட்டியலிட்டு விஜய்யை வேண்டாம் என சொல்ல வைத்துள்ளாராம். இப்போதைக்கு உடல் நலனே முக்கியம். அதனால் நிலைமை சரியாகும் வரை இந்தியா வரவேண்டாம் எனக் கூறியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்