ஒருவழியாக நிதியுதவி நாடகத்தை முடித்து வைத்த விஜய் ரசிகர் மன்றம்

புதன், 13 செப்டம்பர் 2017 (22:46 IST)
நேற்று முன் தினம் முதல் விஜய் மீது பழிபோட்டு ஒரு செய்தி காட்டுத்தீ போன்று பரவி வந்தது அனைவரும் அறிந்ததே. அரியலூர் மாணவி ரங்கீலா என்பவருக்கு மேற்படிப்பு படிக்க விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் வாக்குறுதி கொடுத்துவிட்டு பின்னர் ஏமாற்றியதால் அந்த மாணவி தற்போது ஆடு மேய்த்து கொண்டிருப்பதாக ஒரு செய்தி பரவியது



 
 
இந்த செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் என மிக வேகமாக பரவி விஜய்யின் மானத்தை காற்றில் பறக்கவிட்டது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் இதுகுறித்து தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
அதில் மாணவி ரங்கீலாவுக்கு வாக்கு கொடுத்த ஜோஸ்பிரபு என்பவர் விஜய் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் அவர் கொடுத்த பொய்யான வாக்குறுதிக்கு விஜய் மக்கள் இயக்கம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் இருப்பினும் மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்ட தளபதி, மாணவி ரங்கீலாவின் படிப்பை தொடர நிதி அளித்திருப்பதாகவும், ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவழியாக இந்த நிதியுதவி நாடகம் முடிவுக்கு வந்ததாக நடுநிலையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்