நேரடியாக ஓடிடியில் வெளியான கூழாங்கல் திரைப்படம்!

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (13:57 IST)
இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படமாக கூழாங்கல் அனுப்பப்பட்டது.

ஆனால் ஆஸ்கர் போட்டியின் இறுதிப்பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை.  இந்நிலையில் இந்த படம் இரண்டு ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த இந்த திரைப்படம் இப்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ளது.

இதையடுத்து பலரும் அந்த படத்தை பார்த்து சமூகவலைதளங்களில் பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்